குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும்: போராட்டத்தை நடத்திய ஓய்வூதியதாரர்கள்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இ.பி.எஸ்.95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில், மதுரை தொழிலாளர் ஈட்டுறுதித் திட்ட அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரத்தை அகவிலைப்படி யுடன் வழங்க வேண்டும். பகத்சிங் கோஷியாரி குழு பரிந்துரைத்த இடைக்கால நிவாரணம் ரூ. 3 ஆயி ரத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

மறுக்கப்பட்ட ஆண்டு நிவாரணம் ஆர்.ஓ.சி. உள்ளிட்ட சலுகை களை திரும்ப வழங்க வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இ.எஸ்.எஸ். திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும், நீதிமன்றத் தீர்ப்புக ளின்படி, தகுதியான அனைவருக்கும் உயர் ஓய்வூதியம் வழங்க வேண்டும். முதியோருக்கான ரயில் பயணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை
மதுரை தொழிலாளர் ஈட்டுறுதி அலுவலகம் முன் ஓய்வூதியர் நலச் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.