ஆன்லைன் சூதாட்டத்தை ஒடுக்கி முன்னேற்றத்தை தந்து அதிர வைத்த மத்திய அரசு!
ஆன்லைன் சூதாட்டத்தை ஒடுக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது 1,097 சூதாட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் மக்களவையில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.;

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது ஆன்லைன் சூதாட்டம் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர். வன்முறை நிறைந்த ஆன்லைன் விளையாட்டுகள் இளைய தலைமுறையை பெரிதும் பாதிப்பதாக அவர்கள் கூறினர். அவர்கள் எழுப்பிய துணை கேள்விகளுக்கு மத்திய மிண்ணனு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அவர் கூறியதாவது :-
எப்போதெல்லாம் விதிமுறை சம்பவங்கள் மத்திய அரசின் கவனத்திற்கு வருகிறதோ அப்போது அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் போன்ற செயல்களை ஒடுக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். கடந்த ஆண்டு 1907 சூதாட்டம் இணையதளங்களும் பந்தயம் கட்டி விளையாடும் இணையதளங்களும் தடை செய்யப்பட்டன. சைபர் குற்றங்களை கையாளும் பல்வேறு அமைப்புகள் இடையே நிலவும் ஒருங்கிணைப்பால் ஆன்லைன் சூதாட்டத்தை ஒடுக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.