
விருதுநகர் மாவட்ட சிறையில் உள்ள அண்ணனுக்கு தின்பண்டங்களுடன் கஞ்சாவை மறைத்து வைத்து கொடுத்த தம்பியை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், குருவிளாம்பட்டியைச் சேர்ந்தவர் தமிழரசன். குற்ற வழக்கில் இவரது அண்ணன் விருது நகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிறையில் உள்ள அண்ணனை பார்ப்பதற்காக தமிழரசன், தனது அண்ணன் மனைவியுடன் புதன்கிழமை அங்கு வந்தார். அப்போது, அண்ணனுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட தின்பண்டங்களுடன் இரண்டு சிறிய பைகளில் வைத்திருந்த 12 கிராம் கஞ்சாவை சிறை காவலர்கள் சோதனையின் போது, பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சிறைத் துறை அலுவலர் ரமாபிரபா அளித்த புகாரின் அடிப்படையில், தமிழரசனை மேற்கு போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தில் தொடர்ச்சியான வண்ணம் சிறுவர்களுக்கு குறிப்பாக 18 வயதிற்கு குறைவாக இருக்கும் சிறுவர்களுக்கு கஞ்சா போன்ற போதைப் பொருள் மிக மலிவாக கிடைக்கிறது. அதை அவர்கள் தவறாக பயன்படுத்தி தொடர்ச்சியான வகையில் பல்வேறு விபரீத வேலைகளை செய்து வருகிறார்கள். தகுந்த வகையில் இதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.