பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்தது என்னென்ன?லிஸ்ட் போட்ட நிர்மலா சீதாராமன்!

சென்னை சிட்டிசன் ஃபோரம் அமைப்பு சார்பில் மத்திய பட்ஜெட் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு அதிக நிதியையும் திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்
மேலும் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில்:
ஜன் தன் திட்டம்:1.7 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன இதில் 58% பெண்களின் கணக்குகள்
பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்:12 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன
தூய்மை பாரத திட்டம்:59 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன
ஜல் ஜீவன் இயக்கம்:89 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
பிரதமரின் உஜ்வாலா திட்டம்:41 லட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
ஆயுஷ்மான் பாரத் திட்டம்:ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் என்ற விகிதத்தில் 79 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சுகாதார காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள் உள்கட்டமைப்பு பணிகள்:
4,100 கி.மீ.க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டுள்ளன
2014 முதல் 1,303 கி.மீ.க்கும் அதிகமான புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன மேலும் சுமார் 2,242 கி.மீ. ரயில் வலையமைப்பு மின்மயமாக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் 94% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன