மத்திய அரசின் அனுமதியால் விண்வெளித் துறையில் அடுத்தடுத்து அசர வைக்கும் ஆராய்ச்சிகள்!

ரோவர் மூலம் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.;

Update: 2025-03-24 08:15 GMT
மத்திய அரசின் அனுமதியால் விண்வெளித் துறையில் அடுத்தடுத்து அசர வைக்கும் ஆராய்ச்சிகள்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிலவின் தென்தருவத்தில் சந்திரயான்-3-ன் பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரை தரை இறக்கி பல்வேறு ஆராய்ச்சிகளை செய்தது. இது விண்வெளியில் ஜாம்பவான்களாகத் திகழும் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு இஸ்ரோ மீது நன்மதிப்பையும் போட்டியையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இஸ்ரோ செயல்படுத்த மெகா திட்டங்களுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது.

குறிப்பாக நிலவில் சென்று மாதிரிகளை எடுத்து வருவதற்காக அனுப்ப இருக்கும் சந்திரயான் 4 திட்டம், ஜப்பானுடன் இணைந்து செயல்படுத்த இருக்கும் சந்திரயான் 5 திட்டம் மற்றும் 2035 ஆம் ஆண்டுக்குள் பாரதிய அந்திரிக்ஷ் நிலையம்  என்ற பெயரில் இந்தியாவுக்கு சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் லட்சியத்தை நனவாக்கும் பணி விண்வெளி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மனிதனை விண்ணுக்கு அனுப்ப இருக்கும் ககன்யான் திட்டத்திற்கான மூன்று சோதனை ராக்கெட்டை விண்ணில் செலுத்தவும் மத்திய அரசு போதிய நிதிய ஒதுக்கி அனுமதி அளித்துள்ளது.

தொடர்ந்து வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் இந்தியர்கள் நிலவில் தரையிறங்கும் இலக்கை அடைவதற்கான திறனை வளர்ப்பதன் ஒரு பகுதியாக லட்சிய சந்திரயான்-5 பணிக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது ரோவர் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு சென்று ஆய்வு செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார். நிலவில் கடைசியாக மனிதர்கள் தரையிறங்கி அரை நூற்றாண்டு காலம் கடந்துவிட்டது.  மனிதர்களை செவ்வாய் கிரகத்தில்  குடியரசெய்வது குறித்து பல்வேறு தருணங்களில் அமெரிக்காவை சேர்ந்த எலன் மஸ்க் பேசியுள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்திற்கு டெஸ்லாவின் ஆப்டிமஸ் ஹியூமனாய்டு ரோபோவை ஸ்டார்ஷிப் விண்கலம் மூலம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு இடையே செவ்வாய் கிரக ஆராய்ச்சி பணியையும் இஸ்ரோ தீவிரமாக தொடங்கியுள்ளது குறிப்பாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புக்கு அருகில் உள்ள எல்லை இடங்களில் முதல் வகையான இடத்திலேயே அளவீடுகளை செய்யும் ஆராய்ச்சி கருவிகளை ஆய்வு செய்யும் வெப்பநிலை சென்சார், ஈரப்பதம் சென்சார், அழுத்தம் சென்சார், காற்றின் வேக சென்சார் ,மின்சார புல சென்சார் மற்றும் தூசி ஏரோசோல்களின்  செங்குத்து விநியோகத்தை அளவிடுவதற்கான சுவடு இனங்கள் மற்றும் தூசி சென்சார் ஆகியவை அடங்கும். மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். 

Tags:    

Similar News