கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!

Update: 2025-04-02 16:56 GMT
கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!

தமிழகம் தான் பல்வேறு விதமான கோயில்களை கொண்டிருக்கும் முக்கிய மாநிலமாக திகழ்கிறது இங்கு இருக்கும் ஏராளமான கோயில்களில் பல்வேறு கோயில்கள் ஆக்கிரமிப்பு தான் வருகின்றன. குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் இந்து முன்னணி சார்பில் ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்பில் இருக்கும் கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்ற தீர்மானம் அவர்களுடைய செயற்குழுக் கூடத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அந்த கூட்டத்தில் அவர்கள் கூறும் பொழுது, தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோவில் பழமையான திருக்கோவில் ஆகும்.


அந்தக் கோவிலுக்கு ஏராளமான நஞ்சை நிலங்களும், புஞ்சை நிலங்களும் உள்ளன. அவை பல இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளது.உசிலன்குளம் கிராமத்தில் உள்ள குளம் கோவில் நிலத்தில் உள்ளது, கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் நிலங்களை மீட்க இந்து முன்னணி மாநில செயற்குழு வேண்டுகிறது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு வகைகளில் கோகில் ஆக்கிரமிப்பு தடுக்கப்பட வேண்டும். கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை கோவில் பெயரில் பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும்" என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image Courtesy: News

Tags:    

Similar News