இந்தியா வரலாற்றில் முக்கிய மைல் கல் புதிய பாம்பன் பாலம்:அஸ்வினி வைஷணவ்!

தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தளமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள ராமேஸ்வரம் கடலில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில்வே மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை ஏப்ரல் 6 திறக்க உள்ளார் பிரதம நரேந்திர மோடி இலங்கையில் இரந்து நேரடியாக ராமேஸ்வரம் வருகிறார்
இதற்காக விழாவின் ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி இன்று ஏப்ரல் 5 சென்னை வந்தடைந்தார் அப்பொழுது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ் பாம்பன் ரயில்வே பாலம் தமிழ் பாரம்பரிய கட்டிடக்கலையின் அதிசயமாக விளங்கும்
பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் பாலத்தை கட்டி முடிப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார் பாம்பன் ரயில் புதிய பாலம் வரலாற்றில் ஒரு மைல் கல் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குபாலமும் இதுதான்,சிறப்பான பாரம்பரிய மற்றும் கலைநயத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் இந்திய வரலாற்றில் மிக முக்கியத்துவமானது என்று கூறியுள்ளார்