பொது சிவில் சட்டம் என்பது நாடு முழுவதும் தேவை: கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுரை!

Update: 2025-04-07 17:49 GMT

இந்திய முழுவதும் பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது குறிப்பாக பாஜக கொண்டு வந்த பொது சிவில் சட்டம் என்பதால் பாஜக அல்லாத மாநிலங்களில் இதை நிறைவேற்றுவது தொடர்பாக சர்ச்சைகளும் எழுந்து இருக்கிறது.இந்நிலையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் முடிவு எடுக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்றால் பொது சிவில் சட்டம் அவசியம் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயன்று வருகிறது. மதங்கள், பழக்கவழக்கங்கள், பாரம்பரியம் அடிப்படையிலான தனிநபர் சட்டங்களை நீக்கிவிட்டு அனைவருக்கும் பொதுவான சட்டத்தை கொண்டு வருவது தான் இந்த பொது சிவில் சட்டம். தற்போது கோவா, உத்தரகாண்டில் அமலில் இருக்கிறது. இந்த ஒரு சூழ்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் பொழுது நீதிபதிகள் பொது சிவில் சட்டம் தொடர்பாக கருத்துக்களை எழுப்பி இருக்கிறார்கள். வழக்கு ஒன்றின்போது இது தொடர்பாக நீதிபதி கூறுகையில், அரசியல் அமைப்பு சட்டம் 44 இன் படி, நம் நாட்டில் ஒரே மாதியாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அவசியம் ஆகும்.

இந்த சட்டத்தினை அமல்படுத்தினால், நாடு முழுக்க அனைவருக்கும் நியாமானது ஒரே போல கிடைக்கும். சட்டமேதை அம்பேத்கர் வகுத்து தந்துள்ள அரசியலமைப்பு சட்டமும் இதைத் தான் சொல்கிறது. பொதுசிவில் சட்டத்தினை அமல்படுத்தவதனால், அவர்களுக்கான நியாயத்தை நம்மால் கொடுக்க முடியும். சாதி மதம் தாண்டி அனைவரும் சமம் என்ற கனவு நிறைவேற இந்த பொது சிவில் சட்டம் அவசியமாகும் என்று கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.

Input & Image Courtesy:News


Tags:    

Similar News