இனி ரயிலிலே ஏடிஎம் மூலம் பணம் பெறலாம்:நாட்டிலேயே முதல் முறையாக ரயிலில் ஏடிஎம் வசதி!

Update: 2025-04-18 15:55 GMT

மும்பை மற்றும் பஞ்சவதி இடையே செல்லும் விரைவு ரயிலில் நாட்டிலேயே முதல்முறையாக ஏடிஎம் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது

அதாவது இந்திய ரயில்வே பயணிகள் கட்டணத்தை தவிர இதர வகையில் வருமானத்தை அதிகரிக்க தற்போது பல புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது அதன்படி மும்பை மற்றும் பஞ்சவதி இடையேயான விரைவு ரயிலில் உள்ள குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் ஏடிஎம் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது இந்த புதிய முயற்சியானது புசவால் ரயில்வே மண்டலம் மற்றும் பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது 

இந்த ஏடிஎம் மூலம் ரயில் ஓடிக் கண்டிருக்கும் பொழுது பயணிகள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் இதன் சோதனை முயற்சியும் வெற்றி அடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மேலும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் இந்த ஏடிஎம் இருந்தாலும் அனைத்து பயணிகளும் இந்த ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது 

இந்த ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது மட்டுமில்லாமல் காசோலை மற்றும் கணக்கு விவர அறிக்கையை கோரி விண்ணப்பிக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ஏடிஎம் இருக்கு பயணிகளின் வரவேற்பை பொறுத்து பிற ரயில்களிலும் இந்த வசதி ஏற்படுத்தித் தரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

Tags:    

Similar News