இந்தியாவின் வளர்ச்சி:எந்த குடிமகனும் பின்தங்கி இருக்க கூடாது!பிரதமர் பேச்சு!

Update: 2025-04-21 17:18 GMT

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, எங்கள் அரசு செயல்படுத்தி வரும் கொள்கைகள் அடுத்த 100 ஆண்டுகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இந்தியாவின் முழு மற்றும் முழுமையான வளர்ச்சி என்பது எந்த கிராமமும் எந்த குடும்பமும் எந்த குடிமகனும் பின்தங்கி இருக்கக் கூடாது என்பதுதான் என்று கூறியுள்ளார்

மேலும் அரசு ஊழியர்கள் ஏழைகளின் பிரச்சினைகளை கேட்க வேண்டும் அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்னுரிமையும் அளிக்க வேண்டும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள் அரசு ஊழியர்கள் நீங்கள் வெறும் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் புதிய இந்தியாவின் கைவினைஞர்கள்

இப்போது இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறி உள்ளது அதனால் அடிப்படை வசதிகளை நிறைவு செய்வதே இத்தகைய சூழ்நிலையில் நம்முடைய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் 

Tags:    

Similar News