காஷ்மீர் எல்லைப் பகுதி: இரவு நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு!
காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் உடனடி பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. நள்ளிரவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்புகள் இல்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் இரவு நேரத்தில் மறைந்து இருந்து எல்லைப் பகுதிகளில் தாக்குவதாகவும் இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவும் தயாராகவும் களத்தில் இருக்கிறது.