டெல்லியில் இன்று ஏப்ரல் 28 நடந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலைத்துறை மற்றும் பிற துறைகளில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கினார் அதில் கலைத்துறையில் சிறப்பாக சேவையாற்றியதற்காக நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது
மேலும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது எம்.டி.வாசுதேவன் நாயர் நாகேஸ்வர் ரெட்டி லட்சுமி நாராயணா ஒசாமு சுசூகி ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருதுகளும்; நந்தமூர் பாலகிருஷ்ணா வினோத் குமார் தாம் சுனில் குமார் மோடி சேகர் கபூர் பங்கஜ் பட்டேல் ஜோஸ் சாக்கோ பெரியபுரம் ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது
அதுமட்டுமின்றி டாக்டர் ஆர். லட்சுமிபதி ஓமனகுட்டி அம்மா மிரியாலா அப்பாராவ் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜொய்னாசரண் பதாரி உள்ளிட்ட 41 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது