சிந்து நதி ஒப்பந்த நிறுத்தத்தால் வறண்டு காணப்படும் செனாப் நதி:வெளியான புகைப்படம்!
காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளிடையே பதற்றம் நிலவி வருகிறது மேலும் இந்த தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததால் இந்தியா இதனை கடுமையாக கண்டித்ததோடு இந்த தாக்குதலிற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் ஒரு பகுதியாக தான் சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது
இதன் விளைவாக பாகிஸ்தானின் செனாப் நதி வறண்டு காட்சியளிக்கும் செயற்கைக்கோள் படம் வெளியாகி உள்ளது அதாவது நம் அண்டை நாடான விபத்து மற்றும் இமயமலை அடிவாரத்தில் உள்ள ஹிமாச்சல பிரதேசம் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து உருவாகும் 6 நதிகள் சிந்து நதியன் தொகுப்பாக கருதப்படுகிறது இவற்றில் கிழக்கு நோக்கி பாயும் மூன்று நதிகள் இந்தியாவிற்கும் மேற்கு நோக்கி பாயும் மூன்று நதிகளான சிந்து ஜீலம் செனாப் ஆகியவை பாகிஸ்தானிற்கும் ஒப்பந்தத்தின் படி ஒதுக்கீடு செய்யப்பட்டது
இந்த ஒப்பந்தத்தின் படி இந்தியா இந்த நதிகளின் நீரை பெரிய அளவில் அணைகளை கட்டி தடுக்க முடியாது குறைந்த அளவு நீரை மட்டுமே பயன்படுத்த முடியும் ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக சிந்து நதி ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தி வைத்துள்ளதால் பாகிஸ்தானில் செனாப் நதி வறண்டு காட்சியளிக்கும் செயற்கைக்கோள் படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது
பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக இந்தியா எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் பாகிஸ்தானில் குறைந்தது இரண்டு மாநிலங்களில் குடிநீர் மற்றும் மேலாண்மைக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும் என கூறப்படுகிறது