ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை:விரைவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு!.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது அதில் இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
அதாவது இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் அடுத்து நடத்த இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும் மாநில அளவில் தனியாக கணக்கெடுப்பு நடத்த தேவையில்லை காங்கிரஸ் ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு எப்பொழுதுமே எதிராக இருந்து வந்துள்ளது அதோடு பிரதமராக 2010ல் இருந்த மன்மோகன் சிங் ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அமைச்சரவை தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்
மேலும் பெருவாரியான கட்சிகள் ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஆதரவளித்தன ஆனால் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் ஜாதிவாரி கணக்கிடுபை ஒரு அரசியல் கருவியாகவே பயன்படுத்தியது என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடிகிறது என்று மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்
முன்னதாக பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திவிட்டன தெலுங்கானாவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது