இந்திய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி: முன்னோடியாக திகழும் மோடி அரசு!

Update: 2025-05-04 16:20 GMT

இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கான தளவாடத் தடைகளைக் குறைப்பதற்கும் சந்தை அணுகலை மேம்படுத்துவதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது. புது தில்லியில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஆணையம் ஏற்பாடு செய்த உயர்மட்ட சிந்தனைத் திருவிழாவில் உரையாற்றிய வணிகத் துறை செயலாளர் சுனில் பர்த்வால் இதைத் தெரிவித்தார்.


“விவசாய ஏற்றுமதியில் புதுமை மற்றும் நிலைத்தன்மைக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஒரு முக்கிய மையமாக இருக்க கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் பல்துறை ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்” என்று திரு பர்த்வால் வலியுறுத்தினார். விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் இரண்டும் காலத்தின் தேவை என்று அவர் கூறினார். அமர்வுகளின் போது விவாதிக்கப்பட்ட யோசனைகள் மற்றும் உத்திகள் குறித்து மேலும் ஆலோசிப்பது பற்றிய அமைச்சகத்தின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். 

இந்தியாவில் இருந்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான உத்திகள் குறித்து ஆலோசிக்க மத்திய அரசு, மத்திய அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், கொள்கை வல்லுநர்கள், வேளாண் வர்த்தகம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் துறையைச் சேர்ந்த தொழில் தலைவர்கள் ஆகியோரை இந்த ஆலோசனை உரையாடல் ஒன்றிணைத்தது.

Tags:    

Similar News