பிரதமரின் உறுதி,விடாமுயற்சியை நீங்கள் அறிவீர்கள்,நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும்:ராஜ்நாத் சிங்!

Update: 2025-05-05 03:26 GMT

பஹல்காமில் நடந்த அசம்பாவிதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கை நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்

அதாவது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் சமஸ்கிருத ஜாக்ரன் மஹோத்சவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பொழுது பிரதமர் மோடியின் செயல்பாடுகள் திறமை உறுதி மற்றும் விடாமுயற்சியை நீங்கள் நன்றாக அறிவீர்கள் அதனால் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் உங்களுக்கு உறுதியளிக்க நான் விரும்புகிறேன்

நமது நாட்டைத் தாக்க துணிந்தவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அமைச்சராக தகுந்த பதிலடி வழங்குவது எனது பொறுப்பு எனது வீரர்களுடன் சேர்ந்து நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் எனது பொறுப்பு என்று கூறியுள்ளார் 

Tags:    

Similar News