துணிச்சல் மிக்க ராணுவ போர் வீரர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!

Update: 2025-05-15 03:52 GMT

ஆதம்பூரில் உள்ள விமானப்படை நிலையத்தில் பிரதமர் துணிச்சல்மிக்க போர் வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி ஆதம்பூரில் உள்ள விமானப் படை நிலையத்துக்குச் சென்று நமது துணிச்சல்மிக்க விமானப்படை போர் வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்தார். “துணிச்சல், உறுதிப்பாடு, மற்றும் அச்சமின்மைக்கு காவியமாகத் திகழ்பவர்களுடன் இருந்தது மிகவும் சிறந்த அனுபவமாகும்" என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.


இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது; "இன்று காலை, நான் ஆதம்பூரில் உள்ள விமானப்படை நிலையத்துக்குச் சென்று நமது துணிச்சல்மிக்க விமானப்படை போர் வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்தேன். துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மைக்கு காவியமாகத் திகழ்பவர்களுடன் இருந்தது மிகவும் சிறந்த அனுபவமாகும். நமது நாட்டிற்காக நமது ஆயுதப்படைகள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா என்றும் நன்றியுடன் இருக்கும்.

Tags:    

Similar News