இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் டெலிபோன் பேச்சு: முடிவு என்ன?

Update: 2025-05-16 17:52 GMT

பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் அத்துமீறி இந்திய வழியாக நுழைந்து பஹல்காமில் அப்பாவி இந்திய சுற்றுலா பயணிகளிடம் தாக்குதலை நடத்தி இருந்தார்கள். குறிப்பாக இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்பதை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருந்தது. இதனால் பாகிஸ்தானுக்கு பெரும்பளவில் இழப்பு ஏற்பட்டது.


பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே எல்லையோர பகுதிகளில் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மோதலை நிறுத்து கொண்டனர்.

அதன்பின்னர் கடந்த வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் நேற்று அதிகாரிகள் மீண்டும் தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது மோதல் நிறுத்தத்தை மீண்டும் நீட்டித்து கொள்ள முடிவு செய்தனர்.

Tags:    

Similar News