இந்தியாவில் போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சி: தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் மோடி அரசு!
உலக போதைப்பொருள் தடுப்பு முகமையின் உலகளாவிய போதைப் பொருள் தடுப்பு புலனாய்வு மற்றும் விசாரணை நெட்வொர்க் குறித்த பயிலரங்கை மத்திய இளைஞர் நலன், விளையாட்டுகள் அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்திய தேசிய போதைப் பொருள் தடுப்பு முகமை 2025 மே 12 முதல் 16 வரை புதுதில்லியில் நடத்தவுள்ளது.
இன்டர்போல் எனும் சர்வதேச காவல்துறை, ஆஸ்திரேலிய விளையாட்டு நெறிமுறை அமைப்பு ஆகியவற்றின் கூட்டாண்மையுடன் நடத்தப்படும் இந்தப் பயிலரங்கில் தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்புகள், இந்தியா, இந்தோனேஷியா, மாலத்தீவுகள், இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சட்ட அமலாக்க முகமைகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
ஆசியப் பகுதிகளின் போதை எதிர்ப்பு அமைப்புகள் பங்கேற்புடன் இத்தகைய பயிலரங்கை நடத்துவது இந்திய தேசிய போதைப் பொருள் தடுப்பு முகமைக்கு கௌரவம் அளிப்பதாகும் என்று இந்த முகமையின் தலைமை இயக்குநர் ஆனந்த் குமார் தெரிவித்தார். இந்தப் பயிலரங்கை இந்தியா நடத்துவதற்கு உலக போதைப்பொருள் தடுப்பு முகமையின் இயக்குநர் திரு குன்டர் யங்கர் பாராட்டுத் தெரிவித்தார். இந்த முன் முயற்சியின் தொடர்ச்சியாக 2-வது பயிலரங்கு 2025 ஜூலை மாதத்தில் இந்தியாவில் நடைபெறும்.