பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவில்: பாக். தாக்குதலில் இருந்து இந்திய ராணுவம் காப்பாற்றியது எப்படி?

Update: 2025-05-19 17:06 GMT

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தாக்குதலின் போது 26 சுற்றுலா பயணிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் படுகொலை செய்த சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்பதை கையில் எடுத்த வெற்றிகரமாக நடத்தி இந்தியா யார்? என்பதையும் உலக அரங்கிற்கு நிரூபித்து இருக்கிறது. ஆனாலும் போர் நிறுத்தம் செய்த பிறகும் கூட பாகிஸ்தான் அத்துமீறி பல்வேறு இடங்களில் ட்ரோன் மற்றும் தாக்குதல்களை நடத்தினார்கள். அவை நம் இந்திய ராணுவத்தின் துணையுடன் முறியடிக்கப்பட்டது. அந்த வகையில் பாகிஸ்தான் தாக்குதலில் இருந்த பொற்கோவில் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பது குறித்தான விளக்கத்தை இந்திய ராணுவம் அளித்து இருக்கிறது.


மே 8 , 9 தேதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் தாக்குதலை இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அனைத்து ஏவுகணைகளையும் அழித்தது. அப்போது பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவில் மீது பாக். ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நடத்தியது.ஆனால் இந்திய ராணுவம் மிக திறமையாக செயல்பட்டு அனைத்து தாக்குதல்களையும் முறியடித்தது.


இது தொடர்பான இந்திய ராணுவ 15வது படை பிரிவு மேஜர் ஜெனரல் கார்த்திக் சேஷாத்ரி கூறும் போது,பொற்கோவிலை நோக்கி ஏவப்பட்ட டிரோன்கள், ஏவுகணைகளை இந்திய வான்படை வழிமறித்து தாக்கி அழித்தது. பாகிஸ்தான் சரியான இலக்குகளை இல்லை என்பதை கண்டறிந்தோம். பிறகு அவர்களுடைய நோக்கம் பொற்கோவில் தாக்கலாம் என்று ஊகித்து அவற்றை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை எடுத்தோம் என்று கூறினார்.

Tags:    

Similar News