அம்ரித் பாரத் இரயில் திட்டம்: நமது அடையாளமாக திகழும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்கள்!

Update: 2025-05-23 04:49 GMT

மத்திய கிராமப்புற மேம்பாடு மற்றும் தகவல் தொடர்பு இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி, இந்திய ரயில்வே நமது பொருளாதாரத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல, நமது அடையாளமாக திகழ்கிறது என்று கூறியுள்ளார். ஆந்திரப்பிரதேசத்தில் இன்று பிரதமரால் சூலூர்பேட்டை ரயில் நிலையம் (அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் திருத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது) மெய்நிகர் திறப்பு விழாவிற்குப் பிறகு பேசிய மத்திய அமைச்சர், இந்திய ரயில்வே தினமும் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்கிறது என்றும், இது உலகின் மிகப்பெரிய பணியாளர் கட்டமைப்பு என்றும் கூறினார்.


இன்றைய இந்தியாவில், உள்கட்டமைப்பு என்பது வசதியைப் பற்றியது மட்டுமல்ல, அது நம்பிக்கையைப் பற்றியது என்றும் கூறிய அமைச்சர், அணுகக்கூடிய, திறமையான மற்றும் நமது தேசியப் பெருமையைப் பிரதிபலிக்கும் நிலையங்கள் நமக்குத் தேவை என்றார். "பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், ரயில்வே இந்தியாவின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலின் மையப் புள்ளியாக விளங்குகிறது. அவரது அணுகுமுறை தெளிவாக உள்ளது. ரயில்வே உள்கட்டமைப்பை மாற்றுதல், பயணிகள் அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவின் பரந்த நகர்ப்புற புதுப்பித்தலுடன் நிலையங்களை ஒருங்கிணைத்தல் ஆகியவை இதில் அடங்கும்", என்று அமைச்சர் கூறினார்.

அமிர்த பாரத் நிலையத் திட்டம் இந்தியா முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட நிலையங்களை மறுகட்டமைப்பு செய்ய பரிசீலனை செய்வதற்காக திட்டமிடப்பட்து. சூலூர்பேட்டை ரயில் நிலையத்தின் மறுவடிவமைப்பு ரூ.14.5 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டதாக திரு பெம்மாசானி தெரிவித்தார். இந்த நிலையம் புனித மாவட்டமான திருப்பதியில் அமைந்திருப்பதாலும், நாட்டின் முதன்மையான விண்வெளித் துறைமுகமான ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அருகிலுள்ள நிலையமாகச் செயல்படுவதாலும் இந்திய ரயில்வே வரைபடத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.

Tags:    

Similar News