தென்கொரியா ஆசிய தடகளப் போட்டிகளில் தங்கத்தை தட்டி தூக்கும் இந்தியா!

Update: 2025-05-28 15:25 GMT

26வது ஆசிய தடகளப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் நடைபெற்று வருகிறது அதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர் அதில் இந்தியாவிலிருந்து மட்டும் மொத்தம் 59 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர் 

அந்த வகையில் கலப்பு தொடர் ஓட்ட பந்தயத்தில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 3.18 நிமிடங்களில் பயண தூரத்தை கடந்து தங்கத்தை இந்திய அணி தட்டிச் சென்றுள்ளது. இந்த அணியில் இருந்த நால்வரில் சந்தோஷ்குமார், விஷால் மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்

மேலும் தமிழக வீரர் பிரவீன் சித்திரவேல் தடகளப்போட்டியில் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் 

Tags:    

Similar News