நமது மொழிகள் இந்திய கலாச்சாரத்தின் ஆபரணங்கள்:அமித்ஷா பெருமிதம்!

Update: 2025-06-19 13:34 GMT

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் நிலை உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை நமது மொழி நமது கலாச்சாரத்தின் அணிகலன்களாக உள்ளது 

இதனால் அந்நிய மொழிகளால் இந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்று சாரத்தை கைப்பற்ற முடியாது அதுமட்டுமின்றி நமது நாட்டின் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் மதத்தையும் நாட்டையும் பற்றி புரிந்து கொள்வதற்கு எந்த அந்நிய மொழியும் போதுமானது அல்ல

இந்த போர் எவ்வளவு கடினமானது என்பது எனக்கு தெரியும் இருப்பினும் இதில் இந்திய சமூகம் வெற்றி பெறுவது உறுதி நமது சொந்த மொழிகளில் நமது நாட்டை நடத்துவோம் 2047 இல் இந்தியா சர்வதேச அளவில் முதன்மையாக இருப்பதற்கு நமது மொழிகள் பெரிதும் பங்களிக்கும் என்று கூறியுள்ளார் 

Tags:    

Similar News