அமெரிக்க அதிபர் டிரம்பின் அழைப்பை பிரதமர் மோடி நிராகரித்த காரணம் இதுவா!விளக்கம் அளித்த பிரதமர் மோடி!
ஒடிசாவில் பாரதிய ஜனதா அரசு ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு செய்வதே முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ஒடிசா என்பது வெறும் மாநிலம் மற்றும் அது இந்திய பாரம்பரியத்தை ஒளிரும் நட்சத்திரமாக திகழ்கிறது இதனால் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தில் ஒடிசாவின் பங்கு அதிகரிக்கிறது என கூறியுள்ளார்
அதுமட்டுமின்றி சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அப்பொழுது தொலைபேசி வாயிலாக அமெரிக்க அதிபர் டிரம்பிடம் உரையாடிய பொழுது பிரதமர் நரேந்திர மோடியை ட்ரம்ப் அமெரிக்க அழைத்ததாகவும் அவரது அழைப்பை பிரதமர் நிராகரித்ததாகவும் செய்திகள் வெளியானது அதற்கான காரணத்தை இந்த நிகழ்ச்சியில் கூறி உள்ளார்
அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜி 7 மாநாட்டில் என்னை தொடர்பு கொண்ட அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கனடா வந்துள்ளீர்கள் இந்தியா திரும்பும்பொழுது வாஷிங்டன் வழியாக திரும்புமாறு கூறினார் விருந்து மற்றும் பேச்சுவார்த்தை நடத்த என்னை அழைத்து விடுத்தார் ஆனால் நான் அதிபரிடம் உங்கள் அழைப்பிற்கு நன்றி புனிதமான ஜெகநாதரின் நிலத்திற்கு வர வேண்டும் என்ற காரணத்திற்காக ட்ரம்ப்பின் அழைப்பை பணிவாக மறுத்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி