உடல்,மன ஆரோக்கியத்திற்கு அன்றாட வாழ்வில் யோகா அவசியம்:மத்திய அமைச்சர் எல்.முருகன்

Update: 2025-06-21 12:28 GMT

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் சென்னையிலுள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இன்று ஜூன் 21 நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின விழாவில் கலந்துகொண்டு சுமார் 1000-க்கும் மேற்பட்டோருடன் யோகாசனங்கள் செய்து விழாவைச் சிறப்பித்தார்


இதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு யோகா அன்றாட வாழ்வில் அவசியமாகிறது யோகா நமது வாழ்வியல் நெறிமுறைகளுடன் ஒன்றியுள்ளது என்றும்,யோகாவை தொடர்ந்து செய்துவந்தால் வாழ்வியல் நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும் என்றார். மேலும் நம் பாரம்பரியக் கலையான யோகா பிரதமர் நரேந்திர மோடியால் ஐநா சபையில் முன்மொழியப்பட்டு உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த யோகா தினமானது இனம்,மொழிகள் மற்றும் எல்லைகளைக் கடந்து உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கின்ற சக்தியாக மாறியுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்


தொடர்ந்து மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் யோகா குறித்த ஒரே பூமி,ஒரே ஆரோக்கியம் எனும் தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் திறந்துவைத்து பார்வையிட்டார்

Tags:    

Similar News