ஈரானை தாக்கிய அமெரிக்கா,போர் பதற்றத்தை குறைக்க ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!

Update: 2025-06-22 13:12 GMT

இஸ்ரேல் மற்றும் ஈரானிற்கு இடையே போர் தொடர்ந்து வருகிற நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதலை நடத்தியது ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களையும் அமெரிக்கா தாக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளது

மேலும் இதற்கு ஈரான் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார் அந்த உரையாடலில் அமெரிக்காவின் வான் தாக்குதல்கள் பற்றி தன் கவலைகளை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி மத்திய கிழக்கில் பதற்றத்தை உடனடியாக குறைக்க வேண்டும் எனவும் பேச்சுவார்த்தைகள் மூலம் மோதல்களை தீர்க்க ராஜா தந்திர அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார் 

Tags:    

Similar News