உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஆப்ரேஷன் சிந்தூர்:ராஜ்நாத் சிங் பெருமிதம்!
இன்று ஜூலை 7 தொடங்கி மூன்று நாள் நடக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநரகம் சார்பில் மாநாட்டை தொடங்கி வைத்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய ராணுவம் மற்றும் உள்நாட்டு ராணுவ உபகரணங்கள் தயாரிப்பு பற்றி பேசிய பொழுது நமது பாதுகாப்பு துறையை இன்று உலகமே திரும்பிப் பார்க்கின்றன பெருமிதம் தெரிவித்துள்ளார்
மேலும் ஆபரேஷன் சிந்துவின் மூலம் நமது ராணுவ வீரர்களின் வீரம் வெளிப்பட்டதோடு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது இதனால் நமது ராணுவ தயாரிப்புகளின் தேவையும் அதிகரித்துள்ளது சர்வதேச ராணுவ செலவு கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 2.7 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது இதன் மூலம் நமக்காக மிகப்பெரிய வர்த்தகம் உருவாக உள்ளது என தெரிவித்துள்ளார்