விண்வெளி பயணத்தை நிறைவு செய்து வெற்றிகரமாக பூமி திரும்பிய ஷுபன்ஷு சுக்லா!
இந்திய விண்வெளி வீரரான சுபன்ஷீ சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்பியுள்ளார் பூமிக்கு திரும்பிய இந்திய வீரரை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்பதாக கூறியுள்ளார்
அதாவது விண்வெளிக்கான தனது வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்பி உள்ள ஷுபன்ஷு சுக்லாவை இந்திய நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்வையிட்டு தனது அர்ப்பணிப்பு துணிச்சல் மற்றும் முன்னோடி மனப்பான்மை மூலம் கோடிக்கணக்கானவர்களின் கனவை ஊக்குவித்துள்ளார்
இது நமது சொந்த மனித விண்வெளி பயணமான ககன்யானை நோக்கிய மற்றுமொரு முக்கிய நடவடிக்கை என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்