சோதனையில் வெற்றி அடைந்த ஆகாஷ்வான் பாதுகாப்பு அமைப்பு!

Update: 2025-07-16 15:58 GMT

இந்தியா தொடர்ச்சியாக உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் மற்றும் வேளாண் பொருட்கள் மற்ற பொருட்களையும் தயாரிக்க முனைப்பு காட்டி வருகிறது அதில் தொடர் வெற்றி அடையும் சாதனைகளையும் படைத்து வருகிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 

அதன்படி தற்பொழுது முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ்வான் பாதுகாப்பின் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது இந்திய ராணுவம் அதாவது லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் மிகவும் வேகமாக நகருகின்ற இரு இலக்குகளை ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு துல்லியமாக தாக்கி அழித்துள்ளது 


இந்த சோதனையின் வெற்றியை தொடர்ந்து ராணுவத்தின் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் மூன்றாம் மற்றும் நான்காம் படை பிரிவுகளில் சேர்க்கப்பட உள்ளது 

Tags:    

Similar News