பாரம்பரிய கட்டுப்பாடுகளில் இருந்து பெண்களை விடுவித்து அனைத்து வாய்ப்புகளையும் வழங்க வேண்டும்:மோகன் பகவத்!
மகாராஷ்டிரா ஹூடாட்மா ஸ்மிருதி மந்திரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பெண்களின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றியுள்ளார்
அதாவது அந்த நிகழ்ச்சியில் பேசியவர் ஆண்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உழைப்பார்கள் அதே நேரத்தை பெண்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும் பொழுது அவர்கள் வேலையை பார்ப்பதோடு அதனை அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சியையும் உறுதி செய்கிறார்கள்
மதிப்புகளையும் பாசத்தையும் பெண்கள் தான் கொடுக்கிறார்கள் அவர்களின் பாசத்தில் தான் குழந்தைகள் வளர்கிறார்கள் குழந்தைகள் 12 வயது வரை பெற்றோரின் நிழலில் தான் இருக்கிறார்கள் அப்பொழுது அவர்களின் இயல்பான குணம் உருவாகி அடித்தளம் உருவாகிறது
ஆண்களுக்கு வழங்கிய திறன்களை கடவுள் பெண்களுக்கும் வழங்கியுள்ளார் ஆண்கள் செய்கின்ற அனைத்தையும் பெண்களும் செய்ய முடியும் ஒரு பெண் தான் செய்ய விரும்பும் வேலையை ஆண் அனுமதித்து அவ்வேளையில் அவர்களை திறமையானவர்களாக மாற்ற ஆண்கள் முயற்சிக்க வேண்டும்
நாடு வளர்ச்சி அடைய பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பது அவசியம் அவர்களை பாரம்பரிய கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்து அனைத்து வாய்ப்புகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பெண்கள் பல துறைகளில் முன்னிலையில் உள்ளனர் என பேசி உள்ளார்