அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம்:நாட்டின் நலன் இருந்தால் மட்டுமே ஒப்பந்தம்!

Update: 2025-07-20 05:53 GMT

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் கடந்த நான்கு நாட்களாக வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது இருப்பினும் ஐந்து சுற்று பேச்சின் இறுதியிலும் முடிவு எடுக்கப்படவில்லை இது குறித்து டெல்லியில் நடைபெற்ற அசோசாம் வர்த்தக சபை கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் 

அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நமது நாட்டிற்கு பயன் அளித்தால் மட்டுமே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் நாட்டிற்கு பயனில்லை என்றால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டோம் இந்தியா எப்பொழுதும் நாட்டு நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News