தமிழகத்தில் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்:பிரதமர் உறுதி
ஆடி திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு மத்திய கலாச்சாரத்துறையால் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி வணக்கம் சோழ மண்டலம்,நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என திருவாசக வரியை குறிப்பிட்டு தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, தமிழகத்தில் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்
அதாவது தமிழகத்தில் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் பிரிட்டனுக்கு முன்பாகவே ஜனநாயக ரீதியில் குடவோலை முறை ஆட்சி செய்தவர்கள் சோழர்கள்
இதுவரை நம்மிடம் இருந்து களவாடப்பட்ட 600-க்கும் மேற்பட்ட சிலைகள் தொன்மையான சின்னங்கள் மீட்கப்பட்டுள்ளது இவற்றில் 36 கலைப் பொருட்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.அன்பே சிவம் என்கின்ற திருமூலரின் கோட்பாட்டை உலகம் முழுவதும் கடைபிடித்தால் வன்முறைகள் தாமே தீரும் அப்துல் கலாம், சோழ பேரரசர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை 140 கோடி மக்களின் கனவை அவர்களால் தான் நிறைவேற்ற முடியும் என பேசியுள்ளார்