பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானை தண்டிக்கவே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை:ராஜ்நாத் சிங்!

Update: 2025-07-29 05:09 GMT

ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் எல்லையைத் தாண்டுவதோ அல்லது பிராந்தியத்தைக் கைப்பற்றுவதோ அல்ல என்றும் பாகிஸ்தான் பல ஆண்டுகளாக ஆதரித்து வந்த பயங்கரவாதிகளின் புகலிடங்களை அகற்றுவதும் எல்லை தாண்டிய தாக்குதல்களில் தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்த அப்பாவி குடும்பங்களுக்கு நீதி வழங்குவதும் அதன் நோக்கமாகும் என்று 2025 ஜூலை 28 அன்று மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்

மேலும் பயங்கரவாதத்தின் வடிவத்தில் மறைமுகப் போரை நடத்தியதற்காக பாகிஸ்தானைத் தண்டிப்பதே ஆபரேஷன் சிந்தூரின் ஒட்டுமொத்த அரசியல்-ராணுவ நோக்கமாகும் ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியா தனது ராணுவத் திறனை மட்டுமல்ல அதன் நாட்டின் உறுதிப்பாடு,ஒழுக்கம் மற்றும் அரசியல் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தியது பயங்கரவாதத்திற்கு அடைக்கலம் அளிப்பவர்களும் ஆதரவளிப்பவர்களும் தப்ப முடியாது என தெரிவித்துள்ளார் 

Tags:    

Similar News