ஏமனில் நிமிஷா மரண தண்டனை ரத்து!ஏமன் சமூக செயல்பாட்டாளர் வெளியிட்ட பதிவு!
கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா ஏமன் நாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு அரசு அரசு மருத்துவமனை செவிலியராக சேர்ந்துள்ளார் இவர் கடந்த 2015ல் தனது செவிலியர் பதவியை ராஜினாமா செய்து அதே நாட்டைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் ஆய்டோ மெஹ்தியுடன் இணைந்து புதிய மருத்துவமனையை தொடங்கினார்
ஆனால் 2017 இருவருக்கும் மேற்பட்ட கருத்து வேறுபாடுக்காக நிமிஷா மயக்க ஊசியை தலாலிற்கு செலுத்தி அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது இந்த வழக்கில் கடந்த 2020ல் நிமிஷாவிற்கு சனா நகர நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது ஏமன் உச்சநீதிமன்றமும் இதனை உறுதி செய்த நிலையில் கடந்த ஜூலை 16ஆம் தேதி நிமிஷாவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக ஏமன் அரசு தெரிவித்தது
இந்த நிலையில் சட்டரீதியான முயற்சிகள் மற்றும் உதவிகளை வழங்கி வந்தது இந்திய வெளியுறவு அமைச்சகம் மேலும் நிமிஷாவின் மரண தண்டனையை தள்ளி வைக்குமாறு மத்திய அரசு சார்பில் ஏமன் அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது அதனால் நிமிஷாவின் மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது
இதனைத் தொடர்ந்து நிமிஷாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏமன் சமூக செயல்பாட்டாளர் சர்கான் ஷம்சான் அல் விஸ்வாபி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்