மோடி அரசு மன்மோகன் அரசை போல் தீவிரவாதத்தை வேடிக்கை பார்க்காது:மக்களவையில் அமித்ஷா!
பகல்காம் தாக்குதலிற்கு ஆப்ரேசன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்த விவகாரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் உரையாற்றினார்
அதாவது ஆப்ரேசன் மகாதேவ் மூலம் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் 4 நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் பகல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பகல்காம் தீவிரவாதிகள் 3 பேரையும் சுட்டுக் கொன்று பழி தீர்த்துவிட்டோம் ஆப்ரேசன் சிந்தூரை தொடர்ந்து ஆப்ரேசன் மகாதேவும் முழு வெற்றி அடைந்துள்ளது
பகல்காம் தீவிரவாதிகளை ஜூலை 22ம் தேதியன்று கண்டுபிடித்தோம் ஆப்ரேசன் மகாதேவ் மே 22ஆம் தேதியன்று தொடங்கியது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன அவை பறிமுதல் செய்யப்பட்டவை பகல்காமில் பயன்படுத்தப்பட்ட அதே துப்பாக்கி குண்டுகள்
கணவனை இழந்த பெண்களின் வேதனையை நேரில் சென்று உணர்ந்தேன் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சியடையாதது ஏன் நேற்று ஜூலை 28 சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 3 பேரும் பாகிஸ்தானியர்கள் பயங்கரவாதிகள் வைத்திருந்த ஆயுதங்கள் சாக்லேட்டுகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்
தீவிரவாத பிரச்சனைகளை அப்போதைய காங்கிரஸ் அரசு உதாசீனப்படுத்தியது நேரு செய்த தவறால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது மோடி அரசு மன்மோகன் அரசை போல் தீவிரவாதத்தை வேடிக்கை பார்க்காது என தெரிவித்துள்ளார்