ககோரி சம்பவத்தின் நூற்றாண்டு நிறைவு: பிரதமர் செலுத்திய மரியாதை!

Update: 2025-08-10 17:49 GMT

ககோரி சம்பவத்தின் 100-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அதில் சம்பந்தப்பட்ட இந்தியர்களின் துணிச்சலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு ககோரியில் தேசபக்தியுள்ள இந்தியர்கள் காட்டிய துணிச்சல், காலனித்துவ ஆட்சிக்கு எதிராக மக்களிடையே இருந்த ஆழ்ந்த வெறுப்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என பிரதமர் கூறியுள்ளார்.


மக்களின் பணம் காலனித்துவ சுரண்டலுக்குப் பயன்படுத்தப் படுவதைக் கண்டு அவர்கள் கோபமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் துணிச்சல் எப்போதும் இந்திய மக்களால் நினைவுகூரப்படும் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வலுவான, வளமான இந்தியாவுக்கான அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான இந்த அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “நூறு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், ககோரியில் தேசபக்தியுள்ள இந்தியர்கள் காட்டிய துணிச்சல், காலனித்துவ ஆட்சிக்கு எதிராக மக்களிடையே இருந்த வெறுப்பை எடுத்துக்காட்டுகிறது. மக்களின் பணம் காலனித்துவ சுரண்டலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப் பட்டதால் அவர்கள் கோபமடைந்தனர். அவர்களின் வீரம் எப்போதும் இந்திய மக்களால் நினைவுகூரப்படும். வலுவான, வளமான இந்தியாவுக்கான அவர்களின் கனவுகளை நிறைவேற்ற நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்" என கூறி உள்ளார்.

Similar News