இந்தியாவில் வந்துள்ள புதிய குடியேற்ற சட்டம்!! வெளிநாட்டில் இருந்து வருபவர்களே உஷார்!!

Update: 2025-09-03 07:00 GMT

போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா போன்றவற்றை பயன்படுத்தி இந்தியாவிற்கு சட்ட விரோதமாக வரும் வெளிநாட்டவர்களுக்காக புதிய குடியேற்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருபவர்களின் வருகையை முறைப்படுத்துவதற்காக பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் பதிவு சட்டம், குடியேற்ற சட்டம் போன்றவை ஏற்கனவே அமுலில் இருந்து வந்த நிலையில் தற்பொழுது இவை அனைத்தையும் ஒன்றாக இணைக்கப்பட்டு புதிய குடியேற்ற மசோதா 2025 ல் வரையறுக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு தற்பொழுது நாடு முழுவதும் அமிலுக்கு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து போலி சான்றிதழ்கள் மற்றும் விசா பாஸ்போர்ட் போன்றவற்றை பயன்படுத்தி இந்தியாவிற்கு வருபவர்களுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் குறைந்தபட்சம் ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வெளிநாட்டவர்களை அழைத்து வரும் நிறுவனங்களுக்கும் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதன் படி விசா காலம் முடிவடைந்த பின்னும் இந்தியாவில் இருப்பவர்கள் குறித்த தகவல்களை குடியேற்ற அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் 24 மணி நேரத்திற்குள் தங்களின் வருகையை பதிவு செய்வது மட்டுமல்லாமல் தங்கி இருக்கும் இடம் வந்ததற்கான காரணம் போன்றவற்றையும் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News