ஜிஎஸ்டி வரி விதிப்பில் அதிரடி மாற்றம்!! பொதுமக்கள் மகிழ்ச்சி!!

Update: 2025-09-04 05:55 GMT

இந்தியாவைப் பொறுத்தவரையில் பொருள் மற்றும் சேவைக்கான வரிகள் வழங்கப்படும். எந்த பொருள் மற்றும் சேவைகளை பெற்றாலும் அதற்கு ஜிஎஸ்டி வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது ஜிஎஸ்டி வரி விதிப்பு சீர்திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள் நடத்தப்பட்டது. 

இந்த நடைமுறை வரும் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த நிலையில் விரைவில் பண்டிகை காலங்கள் வர இருப்பதால் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியடைய கூடிய ஒன்றாக உள்ளது. 

அதிலும் குறிப்பாக தீபாவளி பண்டிகை என்றாலே நடுத்தர குடும்பத்தில் இருக்கும் அனைவரும் புவனேஸ் ஆகியவற்றை வாங்கி வீட்டிற்கு தேவைப்படும் பொருட்களை தீபாவளி ஆஃபரில் வாங்கி விட வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த நிலையில் தற்பொழுது தீபாவளி வரப்போகும் நேரத்தில் ஜி எஸ் டி வரி விதிப்பு குறைக்கப்பட்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக உள்ளது. 

சுதந்திர தின விழா உரையாடலை முன்னிட்டு பிரதமர் மோடியும் இது குறித்து பேசினார். ஏற்கனவே 12% மற்றும் 28% ஜிஎஸ்டி விகிதம் இருந்த நிலையில் தற்பொழுது 5% மற்றும் 18% மட்டுமே விதிக்கப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் ஆடம்பரப் பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News