ஜிஎஸ்டியால் குறைந்துள்ள கட்டுமான பொருட்களின் விலை!! பலருடைய கனவு பலிக்க போகுது!!

Update: 2025-09-07 10:13 GMT

கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான பொருட்களான சிமெண்ட் செங்கல் மற்றும் கற்களின் விலை முன்பு இருந்ததை விட குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. காரணம் என்னவென்று பார்த்தால் கட்டுமான பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக எப்படியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஜிஎஸ்டி வரி குறைந்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 

வீடு கட்ட நினைக்கும் மக்களுக்கு மற்ற கட்டிட பணிகளை மேற்கொள்ளும் சில நிறுவனங்களுக்கும் இது மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக உள்ளது. மேலும் கட்டுமான பொருட்களான செங்கல் சிமெண்ட் மற்றும் கற்கள் போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த வரி கணிசமான முறையில் தள்ளுபடி செய்யப்பட்டது செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிமெண்டுக்கு 28% இருந்த ஜிஎஸ்டி 18% குறைந்துள்ளது. செங்கலுக்கு ஏற்கனவே 12% இருந்த ஜிஎஸ்டி தற்பொழுது குறைந்து 5% ஆக்கப்பட்டுள்ளது. 

எனினும் சிமெண்டு கலந்த பொருட்கள், டைல்ஸ் மற்றும் இரும்பு கம்பிகள் போன்றவற்றின் விலைகள் ஏற்கனவே இருந்த 18% எந்த வீதத்திலேயே இல்லை மாற்றமும் இல்லாமல் விற்கப்படுகிறது.

ஆனால் செங்கல், சிமெண்ட் மற்றும் கற்களின் ஜிஎஸ்டி வரி குறைந்து சிறிய அளவில் வீடு கட்ட வேண்டும் என்ற கனவோடு பலருக்கு இருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

Tags:    

Similar News