விநாயகர் சதுர்த்தி நடந்து முடிந்த நிலையில் மும்பையில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி இறுதி நாளாக கொண்டாடப்பட்டது. இந்த இறுதி நாளை ஆனந்த சதுர்த்தி என கோடிக்கணக்கில் மக்கள் வந்து கொண்டாடுவார்கள்.
இதில் ஆயிரக்கணக்கில் விநாயகர் சிலைகள் எடுத்துக்கொண்டு கடலில் சென்று கரைக்க கூட்டம் கூட்டமாக மக்கள் செல்வது வழக்கம். இந்த நிகழ்வில் எந்தவித தவறும் நடக்காமல் இருப்பதற்காக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் புகழ்பெற்ற ஊர்வலத்தை சீர்க்குழைப்பதற்காக ஊர்வலத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் எழுந்துள்ளது.
போக்குவரத்து காவல்துறை அலுவலகத்தில் இருக்கும் வாட்ஸ் அப்பில் இந்த மிரட்டல் வந்த நிலையில் 400 கிலோ எடையுள்ள வெடிமருந்து 14 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பைக்குள் நுழைந்து 34 வாகனங்களில் வெடிகுண்டை வைத்து கோடிக்கணக்கில் மக்களை கொல்லப் போவதாக செய்தி பரவியதை தொடர்ந்து பலரும் அச்சத்திற்கு உட்பட்டனர். இந்த நிலையில் குற்றப்பிரிவு போலீசார் தீவிரவாதத்தை தடுக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்து இது குறித்து விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், எந்தவித மிரட்டல்களையும் போலீஸ் எதிர்கொள்ளும்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் சோதனை செய்யப்பட்டு வந்தது. இறுதியில் இது வெறும் வதந்தி தான் என்றும் யாரும் இதை நம்ப வேண்டாம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.