திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த விபரீதம்!! நடந்தது என்ன?

Update: 2025-09-08 07:01 GMT

 தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் மிகவும் பிரபலமான கோவில் தான் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். இக்கோவிலுக்கு பல ஊர்களில் இருந்து தினந்தோறும் பக்தர்கள் வந்தமயமே இருப்பார்கள். அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம் கூட்டம் அலைமோதும்.

அந்த அளவிற்கு புகழ் பெற்ற கோவிலாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் எப்போதும் போல கோவில் கூட்டத்தில் அலைமோதியுள்ளது. இக்கோவிலில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த விவேக் என்ற 34 வயதுடைய நபர் கண்காணிப்பாளர் பணியில் இருந்து வந்துள்ளார்.

அதே சமயம் குலசேகரப்பட்டினத்தில் உள்ள காவல் நிலையத்தில் பிரபாகரன் என்ற 40 வயது உடைய நபர் போலீஸ் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று திருச்செந்தூர் கோவிலில் புறக்காவல் நிலையத்தில் இருந்த பிரபாகரன் தனக்கு தெரிந்தவர்களை மூத்த குடிமக்கள் வழியில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுப்பி வைத்ததாகவும் அப்போது கண்காணிப்பாளர் பணியில் இருந்த விவேக் அவர்களை அந்த வழியில் செல்லவிடாமல் பேரிகார்டை வைத்து தடுத்ததில் கடுப்பான காவலர் பிரபாகரன், கண்காணிப்பாளர் விவேக் உடன் அடிதடி சண்டையில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதத்தில் இவர்கள் இருவருமே மாறி மாறி தாக்கி கொண்ட நிலையில் அதன் பிறகு கண்காணிப்பாளரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த நபர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காவலரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி அது குறித்த விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News