மலர் கம்பளத்தால் எழுந்த எஃப் ஐ ஆர்!! கேரள பாஜக தலைவர் கண்டனம்!!

Update: 2025-09-08 12:36 GMT

 கேரளாவில் ஒருபுறம் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களும், மறுபுறம் பாஜக கட்சியை சேர்ந்தவர்களும் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபடுவது நடக்கும். இந்த இரண்டு கட்சிக்காரர்களுக்கும் இடையில் பல வகையில் கருத்து வேறுபாடுகள் எப்போதுமே இருந்து கொண்டு உள்ளது. எனவே ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் இந்த இரண்டு கட்சிகளை சேர்ந்த எந்த ஒரு கொடியோ அல்லது கட்சியைப் பிரதிபலிக்கக் கூடிய ஏதும் அடையாளங்கள் இருக்கக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

 இந்தக் கட்டுப்பாட்டினை மீறி தற்பொழுது பாஜகவினர் கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் ஆர் எஸ் எஸ் கொடியுடன் சேர்ந்த ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் எழுதப்பட்டிருந்த மலர் கோலம் இட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினர்களுக்கு இடையே ஏதேனும் கலவரம் தூண்டும் வகையில் செயல்பட்டதாக ஆர் எஸ் எஸ் தொண்டர்களான 25 பேர் மீது போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்தனர்.

 இந்த நிலையில் கேரள மாநிலத்தின் பாஜக தலைவரான ராஜீவ் சந்திரசேகர் தனது வலைதள பக்கத்தில் கேரளா இந்தியாவின் ஒரு பகுதி எனவும், நமது நாட்டின் ராணுவத்தினரின் வீரம் மற்றும் வலிமையின் அடையாளத்தை மலர் கம்பளம் வழியாக வெளிகாட்டியதை தவறாக புரிந்து கொண்டு கேரள போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கும் செயல் கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக அவர்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள எஃப் ஐ ஆர் -ஐ திரும்ப பெற வேண்டுமென்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News