அடித்தவர்களை பிடிக்காமல், தடுத்தவரை கைது செய்த போலீஸ்!! நடந்தது என்ன?

Update: 2025-09-09 08:24 GMT

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஆடுதுறை பேரூராட்சியின் தலைவராகவும், பாமகவின் மாவட்ட செயலாளர் ஆகவும் மற்றும் வன்னியர் சங்க மாநில துணைச் செயலாளராகவும் ம.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். 

கடந்த 5ம் தேதி ஆதரவாளர்களுடன் பேரூராட்சி அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்த நிலையில் எட்டு பேர் கொண்ட குழு காரில் வந்திறங்கி அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி நாட்டு வெடிகுண்டையும் வீசி சென்றது. தாக்குதலிலிருந்து ம. க. ஸ்டாலின் தப்பித்தார். 

இந்த நிலையில் ஆறு தனிப்படைகள் கொண்ட குழு குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ம. க. ஸ்டாலினுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க போவதாக பாமகவின் மாநில இணைப் பொதுச் செயலாளர் திட்டமிட்டு இருந்ததை தொடர்ந்து இவர்களின் வருகைக்காக புரட்சி தமிழகம் கட்சியின் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி டிஜிபி அலுவலகத்தின் வாசலில் காத்துக் கொண்டிருக்கும் பொழுது இங்கு வந்த விடுதலை சிறுத்தை காரர்கள் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தி செருப்பால் அடித்து சண்டையிட்டனர். 

அவர்கள் அடிக்கும் பொழுது அதனை தடுப்பதற்காக மீண்டும் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. தரப்பினரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்ட நிலையில் இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் விசிக பிரமுகரான திலீப் ஏர்போர்ட் மூர்த்தி ஆயுதங்கள் கொண்டு தாக்கியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் போன்ற வகையில் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து மூர்த்தியை கைது செய்தனர். 

Tags:    

Similar News