தமிழ்நாட்டில் ஜெயந்தி போன்ற விழாக்கள் கொண்டாட தடை விதிக்க கோரி எழுந்த மனு!!

Update: 2025-09-11 03:08 GMT

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சத்யபிரியா என்ற பெண் உயர் நீதிமன்றத்தில் தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜை, முத்தரையர் மற்றும் மூக்கையா தேவர் திருவிழா, வீரபாண்டிய கட்டபொம்மன் விழா, மருதுபாண்டியர் குருபூஜை, தீரன் சின்னமலை விழா போன்ற பெயர்களில் நடத்தப்படும் விழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதால் சட்ட ஒழுங்கு முறைகள் பாதிக்கப்பட்டு பிரச்சனை ஏற்படுகிறது என்பதால் இதுபோன்று குருபூஜை விழாக்கள் கொண்டாடப்படக் கூடாது என்பதற்காக தடை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

 இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், குமரப்பன் கூறுகையில், மொத்தமாக இது போன்ற குருபூஜைகளை நடத்தக்கூடாது என்று அரசு தரப்பில் இருந்து கூற முடியாது. ஆனால் அவற்றை முறைப்படுத்துவதற்கு சில நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என கூறினர்.

 இதைத் தொடர்ந்து மனுதாரர் கூறுகையில் ஒவ்வொரு ஆண்டும் 144 தடை விதிக்கப்பட்டாலும் சில ஜாதி சம்பந்தப்பட்ட மோதல்கள் நடக்கத்தான் செய்கிறது என்ற போதிலும் நீதிபதிகள் அதனை மறுத்தனர். இதனைத் தொடர்ந்து 100 மீட்டருக்கு ஒரு போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடக்கும் பொழுது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. 

இதனை தொடர்ந்து நீதிபதிகள் இதுபோன்று விழாக்களை மொத்தமாக தடை விதிக்க முடியாது. ஆனால் இவற்றை ஒழுங்குப்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வர சில விதிமுறைகளை விரைவில் எடுக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர். 

Tags:    

Similar News