மாணவர்களுக்கு இடையில் ஜாதி வேற்றுமையை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு இனி இதுதான் நிலைமை!!
பள்ளிக்கல்வித்துறை தற்பொழுது புதிதாக ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் ஜாதி எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் அவர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்படும் எனக் கூறியுள்ளது.
இதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை இயக்குனராக இருக்கும் எஸ். கண்ணப்பன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்விகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையில் ஜாதி மற்றும் இனம் போன்றவற்றை கூறி கருத்து வேறுபாடுகளை உருவாக்கும் செயல் தவிர்க்கப்படுவதற்காகவும், சில வழிமுறைகளை வகுப்பதற்காகவும் ஓய்வு நிலையில் இருக்கும் நீதிபதி கே சந்துரு தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பள்ளிகளில் ஜாதி மற்றும் இனம் போன்றவற்றை மாணவர்களுக்கிடையில் பரப்பும் ஆசிரியர்களுக்கு எதிராக புறப்படும் புகார் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் அக்குறிப்பிட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தி அவரை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்றும், பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் வகுப்புவாரியான உதவித் தொகைகள் குறித்த விவரங்கள் மிகவும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கிடையில் அதிக அளவில் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதற்காக மகிழ்முற்றம் என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.