இன்றைக்கு இருக்கும் மக்களில் பல பேர் கைகளில் பணத்தை வைத்திருக்கிறார்களோ இல்லையோ கைகளில் வைத்திருக்கும் மொபைல் போனில் யு பி ஐ பயன்படுத்துவதில் தவறுவதில்லை. இந்த யுபிஐ பயன்படுத்தி ஒரு நபர் தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து மற்றொரு நபருடைய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புதல், பங்குச்சந்தையில் முதலீடு மற்றும் வாங்கிய கடனை திரும்பி செலுத்துவது போன்ற பல செயல்களை செய்து வருகின்றனர்.
இப்படி பணம் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்படும் இந்த முறையில் ஒரு சில கட்டுப்பாடுகளும் இருக்கத்தான் செய்தது. இந்த முறையை பயன்படுத்தி அதிகபட்சமாக ஒரு நாளைக்கு எவ்வளவு தொகையை அனுப்ப முடியும் என்பதற்கு இருந்த விதிமுறைகளை மாற்றி தற்பொழுது புதிய விதிமுறைகளை இந்திய தேசிய பணப்பட்டுவாடா கலகம் வெளியிட்டுள்ளது.
அதில் பங்குச்சந்தை முதலீடு, காப்பீடு, கடன் தவணை போன்ற அரசுக்கு செலுத்த தொகைகளை யூ பி ஐ மூலம் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் வரை அனுப்பலாம் என்று இருந்ததை உயர்த்தி ரூ. 10 லட்சமாக அனுப்பிக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. நகை வாங்குவதற்கு ஒரு லட்சம் ஆக இருந்த பரிவர்த்தனை தற்பொழுது ஆறு லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டு பயன்படுத்தி கடன் நிலுவைத் தொகையை செலுத்துவதில் இரண்டு லட்சமாக இருந்தது 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி தனிநபர் வங்கிக் கணக்கிலிருந்து பரிமாற்றம் செய்யப்படும் ஏற்கனவே இருந்த அதே ஒரு லட்சமாக உள்ளது.
கல்விக்கடன்,மருத்துவ கடன் போன்றவற்றிற்கும் ஏற்கனவே இருந்தது போன்று 5 லட்சமாகவே உள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் அனைத்தும் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.