தா.வெ.க திருச்சி மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்!! கண்டுகொள்ளாத போலீஸ்!!

Update: 2025-09-13 15:12 GMT

தாவெக தலைவரான விஜய் இன்று திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் நடத்தினார். இந்த தேர்தல் பிரச்சாரத்தை நடத்துவதற்காக சென்னையிலிருந்து பிரைவேட் ஜெட் மூலம் புறப்பட்ட விஜய் திருச்சி விமான நிலையத்திற்கு காலை 9:40 மணிக்கு வந்தடைந்தார். ஆனால் இவர் வருவதற்கு முன்பாகவே திருச்சி விமான நிலையத்தில் விஜயை பார்ப்பதற்காக அவருடைய தொண்டர்களும் ரசிகர்களும் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர். 

பொதுவாக திருச்சி விமான நிலையம் என்பது பல விஐபிகள் மற்றும் விவிஐபிகள் வந்து செல்லும் விமான நிலையம் என்பதால் எப்போதுமே இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் இன்று திருச்சியில் விஜய் நடத்தும் பிரச்சாரம் இருந்த நிலையிலும் அங்கு 600 போலீசார் மட்டுமே பணியில் இருந்தனர். 

அது மட்டுமல்லாமல் அவர்களும் கூட்டத்தின் நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நின்றது போல இருந்ததால் மேலும் கூட்ட நெரிசல் அதிகமாக ஆனது. மேலும் பிரச்சார வாகனத்தை ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்து வாகனம் வேகமாக செல்ல முடியாமல் ஊர்ந்து கொண்டே சென்றது. இதனால் விமான நிலையத்திலும் திருச்சியில் குறிப்பிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது. 

இந்தக் கூட்டத்தில் விஜயை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பெரியவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை அனைவருமே காலை 8:00 மணி முதல் காத்துக் கொண்டிருந்ததால் சோர்வடைந்து சிலர் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் மயக்கமும் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இன்னும் அதிகமாக போலீசார் இருந்திருந்து தங்களுடைய பணியை செய்து இருந்தால் இது போன்ற கூட்ட நெரிசலை தடுத்து இருக்க முடியும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Tags:    

Similar News