உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுகள் ஆற்றில் மிதந்தது தொடர்பாக நில அளவை உதவி வரைவாளரிடம் விசாரணை!!
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மக்களால் செலுத்தப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வைகை ஆற்றில் மிதந்து சென்றதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. செய்தி பரவி வந்தது. இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் விஜயகுமார் விசாரணை நடத்தி வட்டாட்சியர் சிவகுமாரை இடமாற்றம் செய்து அலட்சியமாக பணியாற்றிய ஏழு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே திருப்புவன வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அளவைப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 பட்டாக்கள் மர்ம நபர் திருடி செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்படாமல் இருந்ததால் திருடி சென்ற நபரின் முகத்தை கண்டறிய முடியாமல் போனது.
இந்நிலையில் தற்போது திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் வரைவாளர் முத்துக்குமரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து நில அளவை அலுவலக சங்கத்தினை சேர்ந்தவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்வது தவறு என்று கூறியதை தொடர்ந்து போலீசார் முத்துக்குமரன் வைகை ஆற்றுக்கு சென்று வந்த சிசிடிவி கேமரா பதிவு கிடைத்துள்ளது. இருந்தாலும் அவர் எந்த மனுக்களை ஆற்றிற்க்கு கொண்டு வந்த ஆதாரம் இல்லாததால் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.