கள்ளச்சாராயம் காயிச்சி விற்பனை செய்து வந்த திமுக கவுன்சிலர்! கைது செய்த போலீசார்!!

Update: 2025-09-16 07:47 GMT

ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெத்தாம்பாளையம் பேரூராட்சி பகுதி 3வது வார்டில் திமுக கவுன்சிலராக எலையாம்பாளையம் ஊரைச் சேர்ந்த சுரேஷ்குமார் இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இவர் பெருந்துறை கிழக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

அப்படி இருக்கும் நிலையில் அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் படி மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு வள்ளி நகரைச் சேர்ந்த முத்துசாமி என்ற 50 வயதுடைய நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அந்த நபரிடமிருந்து 7 லிட்டர் கள்ளச்சாராயம் பிடிபட்டது.

இந்நிலையில் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தும் பொழுது எலையாம்பாளையம் ஊரைச் சேர்ந்த சுரேஷ்குமார் தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது தெரியவந்து அங்கு சென்று சோதனை நடத்திய போலீஸ் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட பாத்திரம் உட்பட பொருள்களை கைப்பற்றி சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

Similar News