பீகார் மாநிலத்தில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இந்த ஆண்டு கடைசியாக நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான அதிகாரப்பூர்வமான அட்டவணை செப்டம்பர் மாத இருதியிலும் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்திலோ தேர்தல் ஆணையம் வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள சட்டமன்ற பதவிக்காலம் 2025 நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (NDA), இந்தியா கூட்டணியும் (INDIA bloc) அவர்களுடைய தொகுதிகளை பிரிப்பதற்காக விரைவாக செயல்படுகிறது. பாஜக–ஜேடியூ இடையே 102 மற்றும் 103 தொகுதிகள் பிரித்துக் கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிற சிறிய கட்சிகளுக்கும் உரிய இடங்கள் வழங்குவதற்காக விரைவான வேலைகளில் NDA செயல்படுகிறது.
மேலும் கூட்டணிகளுக்குள் ஒற்றுமை நிலவுவதாகவும் என்டிஏ குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் பீகார் பயணத்தில் இறுதித் தொகுதிகள் முடியும் என்றும், பாஜகவின் தொண்டர்கள் இதற்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும்.
இதனால் எதிர்க்கட்சிகளுக்கு சிறிய தளர்வும் ஏற்படுவதும் வாய்ப்புள்ளது. காங்கிரஸ் உட்பட பிற கட்சிகள் இன்று தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்யவில்லை. ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மக்களுடன் அதிக அளவில் தொடர்பில் இருந்தாலும் கூட இடையிலுள்ள ஒருங்கிணைப்பு சரியாக அமையவில்லை.
இதனால் இந்த தேர்தல் ஆனது பீகார் மாநிலத்தை மட்டுமல்ல 2029ல் நடக்கப் போகும் மக்களவைத் தேர்தலுக்கும் சில தாக்குதல்களை ஏற்படுத்தும் வல்லுனர்களால் கூறப்படுகிறது.